முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பேருந்து நடத்துநரிடமிருந்து ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்…!

இலங்கைப் போக்குவரத்துச் சபை நடத்துநர் ஒருவர் தனக்கு நீதி கோரி ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதமானது நேற்று (27) ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கைப் போக்குவரத்துச் சபையின் வாழைச்சேனை சாலையில் பேருந்து நடத்துநராகக்
கடமையாற்றும் அபூதாலிப் முஹம்மது ஹிஸாம் என்பவரே ஜனாதிபதியின் கவனத்திற்கு
தனது முறைப்பாட்டைக் கொண்டு சென்றுள்ளார்.

தனக்கான நீதி

ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “கடந்த 22ஆம் திகதி எங்களது பேருந்து வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்பிற்கு
சேவையில் ஈடுபட்டிக்கொண்டிருந்து.

அன்றைய தினம் பி.ப. 4.30 மணிக்கு எமக்கு வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்பிற்கான நேரமாகும். 

இந்நிலையில் எமக்குரிய நேரத்தில் எமது பேருந்துக்கு முன்னால் EP NB 7021 இலக்க தனியார் பேருந்து,
அவ்விடத்தில் நிறுத்தி வைத்து பயணிகளை ஏற்றிக்கொண்டிந்தார்கள். அந்நேரம் நான் பேருந்திற்குள் இருந்த பயணிகளுக்கு டிக்கற்
வழங்கிக்கொண்டிருந்தேன். 

பேருந்து நடத்துநரிடமிருந்து ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்...! | Letter From Bus Conductor To President Anura

அப்போது தனியார் பேருந்தின் சாரதி, நடத்துநர் மற்றும் இன்னும் ஒருவருமாக மூன்று பேர் எமது பேருந்துக்குள் நுழைந்து எனக்கு தலையில்
அடிக்க முற்பட்ட போது நான் தடுத்தேன். 

அடி எனது கையில் பட்டதோடு, இன்னுமொருவர் பொல்லால் எனது தலையில் அடித்து, பின்பு என்னை பேருந்திலிருந்து
வெளியில் இழுத்தெடுத்து என்னைத் தாக்கினார்.

தாக்கியவர்கள் என் கையிலிருந்த டிக்கற் இயந்திரத்தையும் பறித்தெடுத்து என்
கையிலிருந்த 2200.00 ரூபாய் பணத்தையும் அபகரித்துக் கொண்டு தப்பியோடி
விட்டனர். 

அதன் பின்னர் என்னை வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதித்து மேலதிக
சிகிச்சைக்காக மட்டக்களப்பிற்கு மாற்றி கடந்த 24ஆம் திகதி மாலை
வீட்டிற்கு வந்தேன். 

அவர்கள் என்னைத் தாக்கியதில் எனது இடது தோள் பட்டையில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் கூறினார்கள்.

சம்பவம் குறித்து விசாரணை

தற்போது இது தொடர்பாக காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ததற்கிணங்க தனியார்
பேருந்தின் சாரதியை கைது செய்துள்ளனர். மற்றை இருவரையும் கைது செய்யவில்லை.

இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஏற்கெனவே எமது சாலை பேருந்து சாரதி,
நடத்துநர்களோடு பிரச்சினைப்பட்டுள்ளனர். அதற்கான முறைப்பாடும் உள்ளது. 

இவர்கள் அடிக்கடி இந்த வழிப்பாதையில் பிரச்சினையை ஏற்படுத்துகின்றவர்கள்.

பேருந்து நடத்துநரிடமிருந்து ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்...! | Letter From Bus Conductor To President Anura

இது இவ்வாறிருக்க, இதுவரையில் இது தொடர்பாக இலங்கை போக்குவரத்து வாழைச்சேனை
சாலையால் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. 

அத்தோடு சாலை முகாமையாளர் தனியார் பேருந்து நபர்களோடு சமாதானமாகுமாறு என்னிடம் கூறுகின்றார்.

எனவே, இது தொடர்பாக விசாரணை நடத்தி எனக்கு நீதி பெற்றுத்தருமாறு தங்களை மிகத்
தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். ”என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.