நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைதானது அநுராதபுரம் காவல்துறையினரால், யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நகராட்சி
மன்றத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக குற்றவியல் வற்புறுத்தல் மற்றும் கடமைக்கு இடையூறு விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
https://www.youtube.com/embed/WIZLpRvMEpc