யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன்(ramanathan archchuna) இன்று(29) அநுராதபுரம்(anuradhapura) நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்றையதினம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகராட்சி மன்றத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
காவல்துறையின் கடமைக்கு இடையூறு
நாடாளுமன்ற சென்றநிலையில் தனது வாகனத்தில் அங்கீகரிக்கப்படாத விஐபி விளக்குகளைப் பயன்படுத்தியதற்காக ரம்பேவ பகுதியில் வைத்து அர்ச்சுனா எம்.பி காவல்துறையினரால் வழி மறிக்கப்பட்டார்.
எனினும் அவர் காவல்துறையினரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தார்.
இது தொடர்பான காணொளியும் வெளியாகி இருந்ததுடன் காவல்துறை அதிகாரிகளை அவர் திட்டியதும் காணொளியில் பதிவாகியுள்ளது.
இன்று கைது செய்யப்பட்டார்
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் இன்று கைது செய்யப்பட்டார். அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட எம்.பி., பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.