முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற வெளிநாட்டு பிரஜை கட்டுநாயக்காவில் சிக்கினார்

போலி கானா(ghana) நாட்டு கடவுச்சீட்டுடன் இலங்கையை விட்டு வெளியேற முயன்ற 38 வயது நைஜீரிய(nigeria) நபர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) வைத்து கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 கட்டுநாயக்க குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகள் ஜனவரி 29 அன்று குறித்த நபரை கைது செய்தனர். சந்தேக நபர் 2019 முதல் இலங்கையில் இருந்ததாகவும், நீர்கொழும்பு மற்றும் மவுண்ட் லவினியா மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் வழக்குகள் காரணமாக நீதிமன்றம் விதித்த பயணத் தடையின் கீழ் இருந்ததாகவும் புலனாய்வாளர்கள் கண்டறிந்தனர்.

குடிவரவு சட்டங்களை மீறியவர்

அவர் தங்கியிருந்த காலத்தில், குடிவரவுச் சட்டங்களை மீறியதாகவும், மிரிஹானா தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டதாகவும், அதிலிருந்து அவர் தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

இலங்கையிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற வெளிநாட்டு பிரஜை கட்டுநாயக்காவில் சிக்கினார் | Nigerian Man Was Arrested At Bandaranaike Airport

போலி கடவுச்சீட்டை கையளித்ததால் எழுந்த சந்தேகம்

சந்தேக நபர் கத்தார் ஏர்வேஸ் QR-655 விமானத்தில் ஏற இரவு 8:55 மணிக்கு கட்டநாயக்காவிற்கு வந்தார். புறப்படும் நடைமுறைகளை முடித்த பிறகு, அவர் போலி கடவுச்சீட்டை குடிவரவு அலுவலகத்தில் சமர்ப்பித்தார்.

இலங்கையிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற வெளிநாட்டு பிரஜை கட்டுநாயக்காவில் சிக்கினார் | Nigerian Man Was Arrested At Bandaranaike Airport

அதன் நம்பகத்தன்மையை சந்தேகித்த அதிகாரிகள், ஆவணத்தை எல்லை கண்காணிப்பு பிரிவுக்கு பரிந்துரைத்தனர், இது போலியானது என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட அவர் விசாரணைக்காக விமான நிலையத்தில் உள்ள குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்