நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக மாறி இருக்கிறார். கடந்த வருடம் அவரது அமரன் படம் 300 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.
அடுத்து பராசக்தி, மதராஸி என இரண்டு படங்களில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அந்த படங்கள் மீதும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.
இரண்டு மடங்காக திருப்பி தருவேன்
இந்நிலையில் நேற்று சிவகார்த்திகேயன் தனது 40வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் ரசிகர்கள் மற்றும் சினிமா துறையினர் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அவர்களுக்கு நன்றி கூறி சிவகார்த்திகேயன் தற்போது அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
“நீங்கள் தரும் அன்பை இரட்டிப்பாக திருப்பி தர முன்பைவிட இன்னும் அதிகமாக உழைப்பேன்” என சிவகார்த்திகேயன் கூறி இருக்கிறார்.
அவரது அறிக்கை இதோ.