முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜனாதிபதி – IMF பிரதிநிதிகள் இடையே விசேட கலந்துரையாடல்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கும் (Anura Kumara Dissanayake) சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது இன்று (6) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) இணக்கம் காணப்பட்ட விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) முன்னேற்றம் தொடர்பாக விரைவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் ஈடுபாடு

சர்வதேச நாணய நிதியத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் 3 பில்லியன் டொலர் நீட்டிக்கப்பட்ட கடன் திட்டத்தின் கீழ் மூன்றாவது மீளாய்வின் பின்னர் அதிகாரிகள் மட்ட உடன்பாட்டை அரசாங்கம் எட்டியுள்ளது.

ஜனாதிபதி - IMF பிரதிநிதிகள் இடையே விசேட கலந்துரையாடல் | Usd 333 Million Loan President Anura Meet Imf Team

இந்த மீளாய்வின் விடயங்கள் இந்த வருடம் பெப்ரவரி மாத இறுதியில் சர்வதேச நாணய நிதிய பணிப்பாளர் சபைக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது.

இதுதொடர்பான முன்னேற்றம் மற்றும் எதிர்காலத்தில் அந்தத் திட்டத்தை தொடர்வது குறித்த அரசாங்கத்தின் தலையீடு குறித்தும் இதன் போது ஆராயப்பட்டது.

அனுமதி

IMF பணிப்பாளர் சபையின் அங்கீகாரம் கிடைத்ததன் பின்னர் இலங்கைக்கான நீட்டிக்கட்ட கடனுதவியின் நான்காவது தவணையாக 333 மில்லியன் டொலர் தொகை வழங்கப்படவுள்ளது.

ஜனாதிபதி - IMF பிரதிநிதிகள் இடையே விசேட கலந்துரையாடல் | Usd 333 Million Loan President Anura Meet Imf Team

இந்த கலந்துரையாடலில் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன், மாற்று நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி பி.கே.ஜி.ஹரிச்சந்திர, பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதியமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவதன, ஸ்ரீலங்கா மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி வீரா நன்ஹே ஆகியோர் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்