முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ். மாவட்டத்தில் மிக விரைவில் கடவுச்சீட்டு அலுவலகம் – ஜனாதிபதியின் அறிவிப்பு

யாழ்ப்பாண (Jaffna) மாவட்டத்தில் கடவுச்சீட்டு அலுவலகம் ஒன்றை திறப்பதற்கு ஜனாதிபதி
அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) அதற்கான அனுமதியினை உத்தியோகபூர்வமாக
வழங்கியுள்ளார்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று(31) இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்
கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,“ இரண்டு வாரமாக நாடளாவிய ரீதியில் தடைப்பட்ட கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன் யாழ். மாவட்டத்திலும் கடவுச்சீட்டு அலுவலகத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் கூறியுள்ளார்.

கடவுச்சீட்டு அலுவலகம்

அத்துடன், கடவுச்சீட்டு அலுவலகத்தை யாழ். மாவட்ட செயலகத்தில் திறப்பதற்கு வழி வகைகள் எதுவும் இருக்கிறதா? என யாழ்ப்பாண மாவட்ட செயலக பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபனிடம் ஜனாதிபதி வினவினார்.

யாழ். மாவட்டத்தில் மிக விரைவில் கடவுச்சீட்டு அலுவலகம் - ஜனாதிபதியின் அறிவிப்பு | Anura Approves Opening Passport Office In Jaffna

அதற்கு பதிலளித்த பிரதீபன், “எமது மாவட்ட செயலகத்தில் இடப்பற்றாக்குறை இருக்கிறது. இருப்பினும் வடக்கு மக்களுக்கு தேவையான ஒரு விடயமாக கடவுச்சீட்டு அலுவலகம் காணப்படுவதால் அதற்கான இடத்தை ஒதுக்குவது குறித்து ஆலோசிக்கலாம்.” என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் விமல் ரத்நாயக்க, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் சிறீதரன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, ஜெ.றஜீவன், இளங்குமரன், இராமநாதன் அர்ச்சுனா, வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், திணைக்களத் தலைவர்கள், பணிப்பாளர்கள் மற்றும் பதவி நிலை உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

https://www.youtube.com/embed/7kXIKaRbQOk

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.