இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மறைந்த மாவை சேனாதிராஜாவின் (Mavai Senathirajah) புகழுடலுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் (M. A. Sumanthiran) இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
கடந்த 29ஆம் திகதி இவ்வுலகை விட்டு பிரிந்த மாவை சேனாதிராஜாவின் உடல் மக்கள் அஞ்சலிக் காக யாழ். (Jaffna) மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
மாவையின் புகழுடலுக்கு அரசியல் தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்திவரும் நிலையில் இன்று (01) காலை 7:00 மணியளவில் சுமந்திரன் இறுதி அஞ்சலி செலுத்தினார்.
அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி
இதேவேளை முஸ்லீம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் (Rauff Hakeem) நேற்று (31) மாலை மாவை சேனாதிராஜாவின் புகழுடலுக்கு அஞ்சலி
செலுத்தியிருந்தார்.
அத்துடன் நேற்றைய தினம் (31) யாழ் மாவட்டத்திற்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) மாவை சேனாதிராஜாவுக்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தியிருந்தார்.
மாவையின் இறுதிக் கிரியைகள் அன்னாரின் இல்லத்தில் நாளை (02) காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு பின்னர் காலை 10 மணிக்கு அஞ்சலி உரைகள் இடம்பெற்று மதியம் ஒரு மணியளவில் மாவிட்டபுரம் தச்சன்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/embed/u_Iip3WIF_M