முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையில் பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய மின்தடைக்கான காரணம்

புதிய இணைப்பு

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின் தடை குறித்து மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் மின் தடைக்கான காரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், பாணந்துறை மின் இணைப்பு துணை மின்நிலையத்தில் குரங்கு மோதியதால் நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக மின்துறை அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் மின்சார விநியோகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாகவும், இதனால் மின்சாரம் பாதிக்கப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் பின்னர் இந்த நிலைமையை “பாணந்துறை துணை மின்நிலையத்தில் அவசரநிலை” என்று விவரித்துள்ளது.

இந்நிலையில், மறுசீரமைப்பு முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதோடு, இந்த மின் தடைக்கான அதிகாரபூர்வ விளக்கத்தை இலங்கை மின்சார சபை (CEB) இன்னும் வெளியிடவில்லை. 

முதலாம் இணைப்பு 

தேசிய மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட சமச்சீரற்ற நிலைமை காரணமாக நாடளாவிய ரீதியில் திடீர் மின் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் அறிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் ஒரு மணித்தியாலமாக திடீர் மின் தடை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், திடீர் மின் தடைக்கான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

இலங்கையில் பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய மின்தடைக்கான காரணம் | Sudden Island Wide Power Out Ceb Update

எனினும், மறுசீரமைப்பு முயற்சிகள் நடைபெற்று வருவதால், பொதுமக்கள் பொறுமையாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்