முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் இந்திய கடற்றொழிலாளர்களில் ஒருவருக்கு 6 மாத சிறையுடன் 40 இலட்சம் அபராதம்

கடந்த 8 ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் 1 படகுடன் கைதுசெய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் 10 பேரினது வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் நீதவான் நளினி சுபாஸ்கரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கடந்த மாதம் 23 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது
இன்றையதினம் வரை இவர்களை விளக்கமறையில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இன்றையதினம் சிறைச்சாலை அதிகாரிகளால் 10 கடற்றொழிலாளர்களும் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.

வழக்கினை ஆராய்ந்த நீதவான் 10 பேரில் இருவர் சிறுவர்கள் என்பதால் அவர்களை வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

நான்கு மில்லியன் ரூபா அபராதம்

அத்துடன் ஏனைய 8 பேருக்கும் ஆறு வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறை தண்டனை வழங்கி நிபந்தனயுடன் விடுதலை செய்தார்.

யாழில் இந்திய கடற்றொழிலாளர்களில் ஒருவருக்கு 6 மாத சிறையுடன் 40 இலட்சம் அபராதம் | Indian Fisherman Fined Rs 4 Million

இந்த எட்டு பேரில் ஒருவர் படகோட்டி என்பதால் அவருக்கு ஆறுமாத கடூழிய சிறைத்தண்டனை வழங்க உத்தரவிடப்படதொடு, நான்கு மில்லியன் ரூபா அபராத தொகையும் விதிக்கப்பட்டது.

அத்துடன், அதனை செலுத்த தவறின் மேலும் 3 மாத சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதவான் நளினி சுவாஸ்கரன் உத்தரவிட்டிருந்தார்.

கடந்த மாதம் பத்தாம் திகதி நெடுந்தீவு கடலில் எல்லை தாண்டி கடற்றொழில் ஈடுபட்டிருந்த வேளை ஒரு படகுடன் கடற் படையினர் இவர்களை கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்