கடவத்தை கணேமுல்ல அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் நேற்று (14) இரவு 8:00 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்த நபர் எரிந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
உயிரிழந்தவர் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.

சம்பவம் தொடர்பில் கடவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

