கொழும்பு – அங்கொடை சந்தியில் உள்ள கார் உதிரி பாகங்கள் உற்பத்தி நிலையத்தில் பாரிய தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த தீயானது, தற்போது அருகிலுள்ள இரண்டு கடைகளுக்கும் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீயணைப்பு வாகனங்கள் வருவதற்கு முன்னதாக பிரதேச மக்கள் வேகமாக பரவிய தீயை அணைக்க முயற்சிகளை மேற்கொண்ட போதும் அவர்களால் கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளது.
தீயணைப்பு
இந்த நிலையில், கோட்டை மாநகர சபைக்கு சொந்தமான இரண்டு தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயைக் கட்டுப்படுத்த பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இதேவேளை, தீ விபத்தில் வீடொன்றும் கடையொன்றும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது