கிளிநொச்சியைச் (Kilinochi) சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் மீது மாவட்டத்திலுள்ள புலிங்கதேவன் கமக்காரர் அமைப்பு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.
குறித்த ஊடகவியலாளரின் முறையற்ற செயற்பாடுகளால் பல விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்தவகையில் குறித்த நபர் வாய்க்கால் பராமரிப்பு நிதி, கமவிதானை கூலி, குளப்பராமரிப்பு நிதி போன்றவற்றை செலுத்தாமல் அடாத்தாக பயிர் செய்கை மேற்கொண்டு வருவதுடன், கமக்கார அமைப்பின் கமவிதானையையும் தாக்கி பல இடர்பாடுகளை ஏற்படுத்தியதாகவும், அவர்களது நிர்வாக செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தடையாக இருப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
பொதுவான குற்றச்சாட்டு
மேலும் விவசாயிகளைப் பாதிக்கும் வகையிலான செய்திகளை ஊடகங்களுக்கு வழங்கியதாகவும் ஊடகங்கள் குறித்த செய்திகளை வெளியிட்டுள்ளதாகவும் ஊடகங்கள் மீது பொதுவான குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்துள்ளனர்.

இதேவேளை விவசாயிகளின் குற்றச்சாட்டுக்களுக்கமைய சம்பந்தப்பட்ட நபர் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கிளிநொச்சி மாவட்ட செயலாகம் கமநல அபிவிருத்தி திணைக்களத்தை அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

