முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய மாணவர்களின் பெற்றோர்களுக்கான முக்கிய அறிவிப்பு

ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு முக்கிய அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பானது, ஒட்டு சுட்டான் மகாவித்தியாலயத்தின் க.பொ.த. சாத தரம் 1995 அணி பழைய மாணவர்களினால் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்போது, கடந்த ஒரு வருடமாக பாடசாலையின் பெயரை பயன்படுத்தி தங்களுக்கென ஊரில் ஒரு அதிகாரத்தையும் புகழையும் வருமானத்தையும் ஈட்டிக் கொள்வதற்காக வெளிநாட்டிலுள்ள ஒரு சில தீய மற்றும் உள்நோக்கங்கள் கொண்ட சக்திகளும் அவர்களோடு தொடர்புபட்ட பலரும் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோரிடம் கோரிக்கை

அத்தோடு, வெளிநாட்டு தீய சக்திகளால் பலனடைந்த உள்நாட்டிலுள்ள ஒரு சில சுயநலவாதிகளும் உரிய நிர்வாக நடைமுறைகளை பின்பற்றாத பாடசாலைச் சங்கப்பிரதிநிதிகளும் ஒன்றிணைந்து பாடசாலை அதிபர் மீது உள்ள தனிப்பட்ட பகைகளால் பல குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய மாணவர்களின் பெற்றோர்களுக்கான முக்கிய அறிவிப்பு | Oddusuddan Maha Vidyalayam Current Issue

எனினும், இதுவரையிலும், வலயக்கல்வி அலுவலகமோ மாகாண கல்வி திணைக்களமோ அதிபரால் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது என குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை என்றே கூறப்படுகிறது. (விசாரணை இடம்பெற்று வருகின்றது)

இந்த நிலையில், பாடசாலையோடு தொடர்புடைய சங்கங்களின் பெயரைப் பயன்படுத்தி பாடசாலையை குழப்பநினைக்கும் தீய சக்திகளின் நடவடிக்கைகளுக்கு துணை போக வேண்டாம் என பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களிடம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இதேவேளை, ஒன்று பட்ட சமூகமாய் வாழ்ந்து உறவுகளை மதித்த காலத்தை நினைந்து ஒரு ஒருசிலரின் வெளிநாட்டு பணத்தின் திமிர்களுக்கும் அவர்களின் மேலாதிக்க ஆசைகளுக்கும் இடம் கொடுக்காது சுயமாக சிந்திக்கும் சமூகமாக அவர்களை எதிர்த்து அணிதிரள்வீர்கள் என நம்புவதாக அறிவிப்பின் மூலம் தெரிவிக்கப்படுகிறது. 

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.