தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்குமான உறவை நிரந்தரமாக இல்லாமல் ஆக்குவதற்காகத்தான் தையிட்டி விவகாரம் குறித்து இதுவரை முறையான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
யாழ்ப்பாணம்(Jaffna) – தையிட்டியில் திஸ்ஸ ராஜமகா விகாரை அமைந்துள்ள மற்றும் அதனைச் சூழவுள்ள தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி காணி உரிமையாளர்களின் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்திற்கு ஆதரவாக அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களும் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதன் போது கருத்து தெரிவித்த போதே அவர்கள் இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் தெரிவித்த மேலதிக விரிவான கருத்துக்கள் வருமாறு,
https://www.youtube.com/embed/tHbaWbm9gN0?start=908