2025 ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 109 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதன்படி, ஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கு ஆதரவாக 155 வாக்குகளும் எதிராக 46 வாக்குகளும் பதிவாகியுள்ளன.
இரண்டாவது வாசிப்பு
இந்த ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை, இரண்டாவது வாசிப்பிற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நிதியமைச்சராக பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.

அதன்படி, பெப்ரவரி 18 ஆம் திகதி முதல் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு விவாதம் நடைபெற்று வந்த நிலையில், அதன் இறுதி நாளான இன்று 109 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பைத் தொடர்ந்து, குழு நிலை விவாதம் பெப்ரவரி 27 ஆம் திகதி முதல் மார்ச் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

