எஸ்.எஸ்.ராஜமௌலி
தமிழ் சினிமா ரசிகர்கள் ஷங்கரை எப்படி பிரம்மாண்ட இயக்குனர் என கொண்டாடுகிறார்களோ அதேபோல் தெலுங்கு சினிமா ரசிகர்கள் கொண்டாடுவது எஸ்.எஸ்.ராஜமௌலியை தான்.
ஸ்டூடண்ட் நம்பர் 1, விக்ரமார்க்டு, எமதொங்கா, மகதீரா, மரியாதை ராமண்ணா, ஈகா, சத்ரபதி, பாகுபலி, பாகுபலி 2, ஆர்ஆர்ஆர் ஆகிய படங்களை இவர் இயக்கியுள்ளார்.
இவர் இயக்கத்தில் வெளியான 12 படங்களும் ஹிட் வரிசையில் உள்ளது.
புதிய படம்
தற்போது இவர் மகேஷ் பாபுவை வைத்து புதிய படம் இயக்கி வருகிறார், இதில் நாயகியாக நடிகை பிரியங்கா சோப்ரா நடித்து வருகிறார். அண்மையில் படப்பிடிப்பு ஒடிசாவில் தொடங்கியுள்ளது.
ராமாயணம் கதையில் ராம் மற்றும் லக்ஷமனை காப்பாற்ற ஹனுமான் சஞ்சீவி மலையை தூக்கி வந்த கதையை மையப்படுத்தியவாரு கதைக்களம் நகர உள்ளதாம். இது ரூ. 1000 கோடி பட்ஜெட் படம் என கூறப்படுகிறது.