குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும நிவாரணத் தொகையின் மார்ச் மாதத்திற்கான கொடுப்பனவு நாளைய தினம்(12) வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது.
தேசிய நலன்புரி சபை இதனை அறிவித்துள்ளது.
நிவாரணம் பெறும் குடும்பங்கள்
இதன்படி, உரிய பயனாளிகளில் நாளை முதல் தங்களது வங்கிக் கணக்கில் இருந்து அஸ்வெசும நிவாரணத் தொகையைப் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறைந்த வருமானம் கொண்ட 1,732,263 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு இந்த அஸ்வெசும நிவாரணத் தொகை வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.