விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்திற்கு தீர்வாக டோக் குரங்குகளைப்
பிடிக்கும், பொது மக்களுக்கு குறைந்தபட்சம் 500 அல்லது 1,000 ருபாய்
ரொக்கமாக வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித்
சஞ்சய பெரேரா இன்று அரசாங்கத்திடம் முன்மொழிந்தார்.
கணக்கெடுப்பை காட்டிலும் இது சிறந்த வழி என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விலங்குகளால் ஏற்படும் சேதத்தின் பெறுமதியை கருத்தில் கொள்ளும்போது, இதற்காக
சிறிது பணத்தைச் செலவிடுவது பெரிய பிரச்சினை அல்ல என்று ஐக்கிய மக்கள் சக்தி
நாடாளுமன்ற உறுப்பினர் பெரேரா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அதிக செலவுகள்
பேராதனை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சில நிபுணர்கள் 2015 ஆம் ஆண்டில் அப்போதைய
அரசாங்கத்திற்கு குரங்குகளை கருத்தடை செய்யவோ அல்லது டோக் குரங்குகளை
பொருத்தமான இடத்தில் அடைத்து வைக்கவோ முன்மொழிந்தனர்.
எனினும், அதிக செலவுகள் காரணமாக அந்த திட்டங்கள் செயற்படுத்தப்படவில்லை
என்றும் அவர் கூறியுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தால் இந்தப் பிரச்சினைக்கு நீடித்த தீர்வைக் காண
முடிந்தால், அதிக செலவுகள் என்ற பிரச்சினை தொடராது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.