முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மிளகாய்தூளை தூவி திருட்டு! சந்தேக நபருக்கு விளக்கமறியல்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு வேணாவில் பகுதியில் திருட்டுடன் சம்பந்தப்பட்ட சந்தேகநபர்
ஒருவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு வேணாவில் பகுதியில் கடந்த 08.03.2025
அன்று அதிகாலை 2.30 மணியளவில் வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்
மிளகாய்தூளை தூவிவிட்டு வீட்டிலிருந்த ஆண் ஒருவரின்
5,95,000 பெறுமதியான தங்கச்சங்கிலியை திருடி சென்றுள்ளார்.

பாதிக்கபட்ட நபர்

குறித்த சம்பவம் தொடர்பாக பாதிக்கபட்ட நபர் புதுக்குடியிருப்பு பொலிஸ்
நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதனை தொடர்ந்து பொலிஸாரின் தொடர் தேடலில்
குறித்த திருட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மிளகாய்தூளை தூவி திருட்டு! சந்தேக நபருக்கு விளக்கமறியல் | Robbery Suspect Remanded In Custody

கைது செய்யப்பட்ட 34 வயதுடைய
குறித்த சந்தேக நபரை விசாரணைகளின் பின் நேற்றைய தினம் நீதிமன்றில்
முற்படுத்தப்பட்டு எதிர்வரும் 25.03.2025 வரை விளக்கமறியலில் வைக்க
உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் பட்டப்பகலில் வீடு உடைத்து திருடிய
குற்றச்சாட்டில் மேலுமொரு இளைஞர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் ஆசிரியர் ஒருவரின்
வீட்டினை உடைத்து 6,10,000 ரூபா பெறுமதியான தங்கநகைகள் திருடப்பட்ட சம்பவம்
ஒன்று கடந்த 25.02.2025 அன்று இடம்பெற்றிருந்தது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பருத்தித்துறை யாழ்ப்பாணத்தினை சேர்ந்த 24
வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட
சந்தேகநபரினை நேற்றையதினம் (12.03.2025) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில்
முற்படுத்தப்பட்டு எதிர்வரும் 25.03.2025 வரை விளக்கமறியலில் வைக்க
உத்தரவிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்