முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இடைநிறுத்தப்பட்ட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வேலைநிறுத்த போராட்டம்

புதிய இணைப்பு

நாடளாவிய ரீதியாக திட்டமிடப்பட்டிருந்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வேலைநிறுத்த போராட்டத்தை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், நாளை (05) முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்த குறித்த போராட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு 

எதிர்காலத்தில் வைத்தியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

இன்று (04) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.

அதன்படி, வைத்தியர்களுக்கான அடிப்படை வேதனம், மேலதிக சேவைக் கொடுப்பனவு, விடுமுறை நாள் கொடுப்பனவு, வருடாந்த சம்பள அதிகரிப்பு, மற்றும் உழைக்கும் போதான வரி (Paye Tax) செலுத்துவதில் நிவாரணம் வழங்கப்படும் என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

வரவு செலவுத்திட்டடம் 

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் தமது கொடுப்பனவுகளை துண்டித்ததால் மார்ச் 5ஆம் திகதி நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இடைநிறுத்தப்பட்ட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வேலைநிறுத்த போராட்டம் | Doctors Salaries Will Be Increase Minister Said

மருத்துவர்கள் மற்றும் நிபுணத்துவ மருத்துவர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து இன்று சில விடயங்களை முன்வைக்கவுள்ளேன்.

வரலாற்றில் முதற் தடவையாக யாரும் எதிர்பார்க்காத வகையில் எமது அரசாங்கம் சம்பள அதிகரிப்பை அனைத்து ஊழியர்களுக்கும் வழங்கவுள்ளது.

இதற்கு முன்னர் சிறியதொரு கொடுப்பனவே வழங்கப்பட்டதுடன் தறபோது அடிப்படைச் சம்பளம் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது.” என தெரிவித்தார்.

https://www.youtube.com/embed/SxO5L8HrUA0

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.