யாழ்ப்பாணம்(Jaffna) – வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்துச் சம்பவம் இன்று(04.03.2025) இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளானது அதிக வேகம் காரணமாக, அதன் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள்
இந்நிலையில், விபத்தில் காயமடைந்த இருவர் மருதங்கேணி வைத்தியசாலைக்கு கொண்டு
செல்லப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த விபத்து தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலதிக தகவல் – கஜிந்தன்