முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கைதான மகிந்த குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான பெண்: நீதிமன்றத்தின் உத்தரவு

இரண்டாம் இணைப்பு

கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்வின் பாட்டி டெய்சி ஃபாரஸ்ட் விக்ரமசிங்கவுக்கு தலா 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த உத்தரவானது, கடுவெல நீதவான் நீதிமன்றத்தால் இன்று (05) வழங்கப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச சம்பந்தப்பட்ட பணமோசடி விசாரணை தொடர்பாக டெய்சி பாரஸ்ட் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.

யோஷிதவின் தாய் வழி பாட்டியான டெய்சி பாரஸ்ட் விக்ரமசிங்க இன்று (05) CID யிடம் வாக்குமூலம் அளித்த பின்னர் கைது செய்யப்பட்டதாகவும், கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முற்படு்த்தப்படவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 

பெப்ரவரி மாத தொடக்கத்தில் சட்டமா அதிபர், யோஷித ராஜபக்ச மற்றும் டெய்சி பாரஸ்ட் விக்ரமசிங்க ஆகியோருக்கு சொந்தமான ரூ. 59 மில்லியன் கூட்டுக் கணக்கு தொடர்பான பணமோசடி சட்டத்தின் கீழ் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.

விசாரணை

2016 முதல் நடத்தப்பட்ட விசாரணைகளில் யோஷித ராஜபக்சவினால் நிதி தொடர்பாக முறையான விளக்கங்களை வழங்க முடியவில்லை என்று கண்டறியப்பட்டதை அடுத்து, பணமோசடி சட்டத்தின் கீழ் இருவருக்கும் எதிராக காவல்துறையும் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது.

கைதான மகிந்த குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான பெண்: நீதிமன்றத்தின் உத்தரவு | Yoshitha Case Daisy Achchi Arrested By Cid

விசாரணையின்படி, சந்தேகத்துக்குரிய நிதி நிலையான வைப்புத்தொகைகள் மற்றும் வங்கிக் கணக்குகளில் வைக்கப்பட்டுள்ளதுடன், டெய்சி பாரஸ்ட் விக்ரமசிங்கவுடன் யோசிதவினால் பராமரிக்கப்படும் கூட்டுக் கணக்கிளும் வரவு வைக்கப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.