நிர்வாணமாக மோட்டார் சைக்கிள் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்ட நபர் மனநலக் கோளாறால் பாதிக்கப்பட்டவர் என்பது கண்டறியப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க இந்த விடயத்தை வெளியிட்டுள்ளார்.
அத்தோடு, தலைக்கவசம் இல்லாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டினாரா அல்லது நுகேகொடையிலிருந்து நிர்வாணமாக வந்தாரா என்பது விசாரணைகளுக்குப் பிறகுதான் உறுதிப்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கைது நடவடிக்கை
கடந்த மூன்றாம் திகதி கொழும்பிலிருந்து கண்டி நோக்கி நிர்வாண கோலத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற நபரொருவரை கடுகண்ணாவ காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் அஹங்கம பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என்றும் காவல்துறையினர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.