முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தப்பியோடிய இராணுவ சிப்பாயின் வெறிச் செயல் : பெண் மருத்துவர் வன்புணர்வு

சிறிலங்கா இராணுவத்திலிருந்து(sri lanka army) தப்பியோடிய இராணுவ சிப்பாய் ஒருவர் இரவுநேர கடமையிலிருந்த பெண் மருத்துவரை வன்புணர்விற்கு உட்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.

அநுராதபுரம் வைத்தியசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர்

குறித்த சந்தேக நபர், இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், சந்தேக நபரின் இருப்பிடம் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால(ananda wijepala) நாடாளுமன்றத்தில் இன்று(11) தெரிவித்தார்.

தப்பியோடிய இராணுவ சிப்பாயின் வெறிச் செயல் : பெண் மருத்துவர் வன்புணர்வு | Army Deserter Raped A Lady Doctor

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(sajith premadasa) எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், சந்தேக நபரின் இருப்பிடத்தை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளதாகவும், அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கை நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

ஐந்து காவல்துறை குழுக்கள் களத்தில்

“சந்தேக நபரை விசாரித்து கைது செய்ய ஐந்து காவல்துறை குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன,” என்று அவர் குறிப்பிட்டார்.

தப்பியோடிய இராணுவ சிப்பாயின் வெறிச் செயல் : பெண் மருத்துவர் வன்புணர்வு | Army Deserter Raped A Lady Doctor

பாதிக்கப்பட்ட 32 வயது வைத்தியர் நேற்று (10) தனது கடமைகளை முடித்துவிட்டு, அரசாங்கத்தால் வைத்தியர்களுக்காக வழங்கப்பட்ட அவரின் தங்குமிடத்திற்குச் சென்றுள்ளார்.

பின்னர் மாலை 6:30 மணி முதல் 7 மணி வரையான காலப்பகுதியில் அடையாளம் தெரியாத ஒருவர் அவரின் தங்குமிடத்திற்கு சென்று, கத்தியைக் காட்டி மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

அநுராதபுரம் வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பு

இந்நிலையில், இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அனுராதபுரம் வைத்தியசாலை வைத்தியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (11) ஈடுபட்டுள்ளனர்.

தப்பியோடிய இராணுவ சிப்பாயின் வெறிச் செயல் : பெண் மருத்துவர் வன்புணர்வு | Army Deserter Raped A Lady Doctor

சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வைத்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்