நாளை நடைபெற உள்ள விலங்கு கணக்கெடுப்புக்கு ஏற்ப, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாளை விடுமுறை அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் (Chamara Sampath) தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் விலங்கு கணக்கெடுப்பு திட்டத்தை விமர்சிக்கும் வகையில் அவரின் இந்த கருத்து நாடாளுமன்றில் வெளியிகியுள்ளது.
அரசாங்கம் காலை 8.00 மணி முதல் காலை 8.05 மணி வரை நாடு முழுவதும் விலங்கு கணக்கெடுப்பை அறிவித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் சாமர சம்பத் குறிப்பிட்டார்.
இதன்படி, நாளை நாடாளுமன்றத்திற்கு விடுமுறை அறிவிக்குமாறு சபாநாயகரை வலியுறுத்துவதாகவும் தாங்கள் கிராமங்களுக்குச் சென்று தங்களது தோட்டங்களில் உள்ள விலங்குகளை எண்ண வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
நாங்கள் நாடாளுமன்றத்தில் இருக்கும்போது எங்கள் தோட்டங்களில் உள்ள விலங்குகளை யாரை எண்ணவது என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
https://www.youtube.com/embed/pvtqa9LVXe4