ஊடகவியலாளர்களின் தொழில் திறனை மேம்படுத்துவதற்காக ஒரு பட்டய நிறுவனத்தை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, குறித்த வேலைத்திட்டத்திற்காக வரவு செலவுத் திட்டத்தில் இதற்காக 25 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நிதி ஒதுக்கீடு
மேலும், ஜூன் மாதத்திற்குள் ‘தேசிய ஊடகக் கொள்கை’ வகுக்கப்பட்டு வெளியிடப்படும் என்றும், ஊடகவியலாளர்க்கு ஆண்டுக்கு 100 புலமைப்பரிசில்கள் வழங்கப்படும் எனவும் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நளிந்த தெரிவித்துள்ளார்.

நல்ல பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் காணப்படும் நெறிமுறைகள் குறித்து பாடசாலை மாணவர்களுக்குக் கல்வி கற்பிக்கும் பட்டறைகள் நடத்தப்படும் என்றும் அமைச்சர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.

