முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மணித்தியால கணக்கில் மின்சார தடை : மின்சார சபையின் அசமந்தம்

வவுனியாவில் (Vavuniya) மின்சாரம் தடைப்பட்ட நிலையில் 40 மணித்தியாலங்களின் பின்னரே மீண்டும் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வவுனியாவில் மின்சாரம் தடைப்படும் நிலையில் யாழ் அலுவலகத்திற்கு முறைப்பாடு
வழங்கப்படும் முறை காணப்பட்டுள்ளது.

இருப்பினும், முறைப்பாடு வழங்கப்பட்டும் உடனடியாக திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

மின்சார தடை

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “வவுனியா – யாழ் வீதியில் உள்ள வீடொன்றிற்கு கடந்த ஐந்தாம் திகதி மின்சாரம்
தடைப்பட்டதாக சுமார் 3.36 மணிக்கு மின்சார சபையின் யாழ் அலுவலகத்திற்கு
முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மணித்தியால கணக்கில் மின்சார தடை : மின்சார சபையின் அசமந்தம் | Electrical Barrier In Vavuniya District

இதன் பிரகாரம் முறைப்பாட்டை பெற்றுக் கொண்ட அலுவலகம் குறித்த
வாடிக்கையாளருக்கு முரண்பாடு கிடைத்ததற்கான குறுஞ்செய்தி அனுப்பியிருந்தது.

எனினும், தொடர்ச்சியாக வீட்டிற்கான மின்சாரம் இல்லாத காரணத்தால் மின்சார சபையை
மீண்டும் தொடர்பு கொண்டிருந்தார்.

திருத்த பணிகள்

எனினும், திருத்த பணிகள் இடம்பெறும் என்ற பதில் மாத்திரமே குறித்த
வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இரவு நேரமும் மின்சாரம் கிடைக்காத நிலையில் 24 மணித்தியாலம் கடந்து
வாடிக்கையாளர் மீண்டும் யாழ் அலுவலகத்துடன் நேற்று (07) மாலையும் தொடர்பு கொண்ட
போது வவுனியா அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டதோடு மீண்டும்
முறைப்பாடு பெற்றுக் கொண்டமைக்கான குறுஞ்செய்தியும் அலுவலகத்தினால்
அனுப்பப்பட்டிருந்தது.

மணித்தியால கணக்கில் மின்சார தடை : மின்சார சபையின் அசமந்தம் | Electrical Barrier In Vavuniya District

இதன் பிரகாரம் வவுனியா மின்சார சபை அலுவலகத்துக்கு தொடர்பு கொண்ட நிலையில்
அங்கிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரே குறித்த தொலைபேசி அழைப்புக்கு
பதில் அளித்துள்ளார்.

இது தொடர்பில் குறித்து வாடிக்கையாளர் தனியார் நிறுவன பாதுகாப்பு
உத்தியோகத்தராக கடமையாற்றும் தாங்கள் மின் தடைப்பட்டமைக்கு எவ்வாறு பொறுப்புக் கூற முடியும் என கேட்டபோது அவர் தனக்கு தரப்பட்ட உத்தரவை தான் பின்பற்றுவதாக
தெரிவித்திருந்தார்.

மின்சார சபை

இந்தநிலையில், மீண்டும் மின்சார சபையோடு தொடர்பை மேற்கொண்ட போதிலும்
ஆறாம் திகதி மின்சார இணைப்பு வழங்கப்பட்டிருக்கவில்லை.

அத்தோடு, நேற்று (07) திகதி காலை 10 மணியளவில் சுமார் 40 மணித்தியாலங்கள்
கழித்து திருத்தப் பணிகள் மேற்கொள்வதற்காக ஊழியர்கள் வருகைதந்து
திருத்தப்பணியை மேற்கொண்டுள்ளனர்.

மணித்தியால கணக்கில் மின்சார தடை : மின்சார சபையின் அசமந்தம் | Electrical Barrier In Vavuniya District

குறித்த செயற்பாட்டுக்கு மின்சார சபை பொறியியலாளரின் அசமந்தமே காரணம் என
தெரிவிக்கப்படுவதோடு இவ்வாறான சம்பவங்கள் வவுனியாவில் அதிகளவில் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் எழுத்து மூலமான முறைப்பாடு ஜனாதிபதி செயலகம் மற்றும் வன்னி
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் குறித்த வாடிக்கையாளரினால் அனுப்பப்பட்டு
இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.