முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஆட்டிப்படைக்கப் போகும் சனிப் பெயர்ச்சி! கஷ்டம் அதிகரிக்க உள்ள 3 ராசிகள்

நவகிரகத்தில் மிகவும் மெதுவாக நகரக் கூடியவர் சனி பகவான். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை பெயர்ச்சி ஆவார்.

கர்ம காரகன் என அழைக்கப்படக்கூடிய சனி பகவானின் பெயர்ச்சி, ஜோதிட ரீதியில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. பொதுவாக சனி பகவான் ஏழரை சனி காலத்தில் மிகவும் கடினமான பலன் தரக்கூடியவராக இருப்பார்.

சனி பகவான் தான் சஞ்சரிக்க கூடிய ராசிக்கும், அதற்கு முன் மற்றும் பின் உள்ள ராசிகளுக்கு ஏழரை சனி நடக்கும்.

அந்த வகையில் சனி பெயர்ச்சியாக உள்ள மீன ராசிக்கும், அதற்கு முன் உள்ள கும்பம், அதற்கு பின் உள்ள மேஷ ராசிக்கும் ஏழரை சனி நடக்கும்.

அதே போல அஷ்டம சனி (சிம்மம்), அர்த்தாஷ்டம சனி ( தனுசு) நடக்கக்கூடிய ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இனி சனி பகவானின் மாறுதலால் கவனமாக இருக்க வேண்டிய ராசிகளை தெரிந்து கொள்வோம்.

மேஷம்

மேஷ ராசிக்கு ஏழரை சனியின் முதல் பகுதியான விரய சனி தொடங்க உள்ளது. இந்த விரய சனி காலத்தில் மிக மிக கவனமாக இருப்பது நல்லது. உங்கள் வாழ்க்கையில் மன கலக்கமும், நிதி நிலை சார்ந்த சிக்கல்களையும் எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. எதிர்பார்த்ததை விட அதிக செலவுகள் மன கவலையை அதிகரிக்க செய்யும்.

ஆட்டிப்படைக்கப் போகும் சனிப் பெயர்ச்சி! கஷ்டம் அதிகரிக்க உள்ள 3 ராசிகள் | Horoscope 2025 Troubles These Zodiac Sanipeyarchi

தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படலாம். குறிப்பாக உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

இந்த காலத்தில் உங்களின் விரய செலவுகளை, சொத்து வாங்குதல், தங்கத்தில் முதலீடு செய்தல் போன்ற சுப செலவுகளாக மாற்றிக் கொள்வது நல்லது. இந்த காலத்தில் தான, தர்மங்களில் ஈடுபடவும்.

இது உங்கள் செலவை அதிகரித்தாலும், உங்களின் மன மகிழ்ச்சியையும், புண்ணியத்தையும் அதிகரிக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்கு எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால், அஷ்டம சனி காலத்தில் புதிய வேலையை தொடங்குவதைத் தவிர்க்கவும். வேலை தேடுபவர்களுக்குத் தாமதம் ஏற்பட்டாலும் நல்ல செய்தி கிடைக்கும். உடல் நலனில் கவனம் தேவை. அது தொடர்பான செலவுகள் அதிகரிக்கும்.

ஆட்டிப்படைக்கப் போகும் சனிப் பெயர்ச்சி! கஷ்டம் அதிகரிக்க உள்ள 3 ராசிகள் | Horoscope 2025 Troubles These Zodiac Sanipeyarchi

இந்த காலத்தில் குடும்பத்தில் நிம்மதி இல்லாத சூழலும், சண்டை, சச்சரவுகள் சந்திக்க வாய்ப்புள்ளது. மனதில் ஏதேனும் ஒரு குழப்பம் இருக்கும். பணியிடத்தில் உங்கள் வேலையை சரியான வகையில் ஒழுக்கத்துடன் செய்து முடிக்கவும். இல்லையெனில் வேலை பறிபோக வாய்ப்புள்ளது.

பணியிடத்தில் வாக்குவாதங்களில், பிரச்சினைகளில் ஈடுபட வேண்டாம்.

புதுமண தம்பதிகள், உங்கள் மண வாழ்க்கை குறித்த கனவுகள் அதிகரிக்கும். துணையுடன் இணக்கமான சூழல் இருந்தாலும், வாழ்க்கையில் இனிமையை அனுபவிக்க இயலாத சூழல் இருக்கும்.

கும்பம்

கும்​ப ராசிக்கு ஏழரை சனியின் கடைசி பகுதியான பாத சனி நடக்க உள்ளது. உங்கள் ரசிக்கு 2 ஆம் வீடான தன, வாக்கு ஸ்தானத்தில் சனி சஞ்சாரம் செய்ய உள்ளார். இந்த பாத சனி காலத்தில் கும்ப ராசியினர் வண்டி, வாகன பயன்பாட்டில் கவன தேவை. காலில் அடிபட வாய்ப்புள்ளது.

ஆட்டிப்படைக்கப் போகும் சனிப் பெயர்ச்சி! கஷ்டம் அதிகரிக்க உள்ள 3 ராசிகள் | Horoscope 2025 Troubles These Zodiac Sanipeyarchi

நொண்டி நடக்க வேண்டிய நிலை இருக்கும். வாக்கு ஸ்தானத்தில் சனி இருப்பதால் உங்கள் பேச்சால் தேவையற்ற வில்லங்கங்கள் ஏற்படும்.

விரய சனி, ஜென்ம சனியைப் போல சனியின் மாயைகளிலிருந்து விடுபட்டாலும், பிரச்சினைகள் தொடரக்கூடியதாகவே இருக்கும்.

உங்கள் கல்வி, வேலை வாய்ப்பு, திருமண முயற்சி போன்ற விஷயங்களில் தாமதமும், காத்திருக்க வேண்டிய சூழலே இருக்கும்.

திருமண வாழ்க்கை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

துணையுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பண வரவு எதிர்பார்த்த வகையில் இல்லாமல், மந்த நிலை இருக்கும். இருப்பின் இறுதியில் உங்களுக்கு நன்மைகள் அதிகரிக்கக்கூடிய காலமாகவே இருக்கும்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.