கடந்த ஜனவரி மாதம் கம்பளை தவுலகல பகுதியில் கடத்தப்பட்ட 19 வயது மாணவியை மீட்க முயன்ற இளைஞருக்கு இலங்கை பொலிஸ் பாராட்டு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தில் பலத்த காயங்களுக்கு ஆளான அந்த இளைஞர், தனது வீர மீட்பு
முயற்சிக்காக இலங்கை பொலிஸால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
ஜனவரி 11ஆம் திகதியன்று வானில் வந்த ஒரு குழுவால் சிறுமி கடத்தப்பட்ட
காணொளிக் காட்சிகள் வெளியாகின.
விசாரணையில் வெளிவந்த தகவல்
இதன்போது, குறித்த இளைஞர், மாணவியை மீட்க துணிச்சலாக செயற்பட்டமையை பலரும்
பாராட்டியிருந்தனர்.

இந்தநிலையில், கடத்தலின் முக்கிய சந்தேக நபர் சிறுமியின் தந்தை வழி உறவினர்
என்றும், திருமணப் பிரச்சினைகள் காரணமாக இது நடந்ததாகவும் பின்னர் பொலிஸ்
விசாரணையில் தெரியவந்தது.

