யாழ்ப்பாணத்தில்(jaffna) கல்சியம் நீக்கி திரவத்தை அருந்திய நபர் ஒருவர் இன்றையதினம்(08)
யாழ்ப்பணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
கச்சாய் தெற்கு,
கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த பேரம்பலம் யோகேஷ்வரன் (வயது 64) என்பவரே இவ்வாறு
உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதி
குறித்த நபர் நேற்றையதினம் அவரது வீட்டில் இருந்த கல்சியம் நீக்கிய திரவத்தை
அருந்தியுள்ளார். இதனையடுத்து அவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை கொண்டு
செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனாவைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளார். அவரது சடலம்
மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாய பிறேம்குமார்
மேற்கொண்டார்.