முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழர்களது விவகாரத்தில் ஜே.வி.பியினரும் யுத்த குற்றவாளிகளே! கஜேந்திரன் திட்டவட்டம்

தமிழர்களது விவகாரத்தில் ஜே.வி.பியினரும் யுத்த குற்றவாளிகளே.

நாட்டை ஆண்டவர்கள்
அனைவருமே குற்றவாளிகளாக இருக்கின்ற காரணத்தினால் தமிழர்களை பொறுத்தளவில்
எங்களுடைய விவகாரங்களை சர்வதேச குற்றவியல் விசாரணை நீதிமன்றத்தின் ஊடாக அல்லது
சர்வதேச நீதிமன்றத்தின் ஊடாக மாத்திரம் தான் நீதி பெற்றுக் கொள்ள முடியும் முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

தியாக தீபம் அன்னை பூபதியின் 37வது நினைவை முன்னிட்டு மட்டக்களப்பு நாவலடி
பகுதியில் அமைந்துள்ள அன்னாரினது நினைவில்லத்தில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வின்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

13ம் திருத்தச் சட்டத்தை நிராகரிக்கின்றோம், 2017 செப்டம்பர் 21 ஆம்
தேதி ரணில் மைத்திரி அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட புதிய அரசியல் வரைபானது
அதனையும் நாங்கள் நிராகரிக்கின்றோம்.

தமிழரசு கட்சி

அதே நேரத்தில் 1951 ஆம் ஆண்டு தமிழரசு
கட்சி திருவண்ணாமலை மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்களில் அடிப்படையில்
தமிழர்களுடைய தேசம் சுயநிர்ணயம் உரிமை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான சமஸ்டி
என்ற அடிப்படையிலான அரசியல் தீர்வுகளுக்காக நாங்கள் தொடர்ந்தும்
செயலாற்றுவோம்.

தமிழர்களது விவகாரத்தில் ஜே.வி.பியினரும் யுத்த குற்றவாளிகளே! கஜேந்திரன் திட்டவட்டம் | Jvp Members Are Also War Criminals

அந்த அடிப்படையிலான வரைபு ஒன்று தமிழ் மக்கள் பேரவையினால் 2016ஆம் ஆண்டு
ஏப்ரல் மாதம் பத்தாம் தேதி வெளியிடப்பட்டிருந்தது.

அந்த தீர்வை அடைவதற்காக
நாங்கள் அர்ப்பணிப்போடு நேர்மையாக பயணிப்போம் என்பதனை இந்த இடத்திலேயே
உறுதிப்பட தெரிவித்துக் கொள்கின்றோம்.

காணி உறுதி

அதன் மூலமாக மாற்றம் தான் தென் தமிழீழ தேசமாக இருக்கலாம். அல்லது வட தமிழீழ
தேசமாக இருக்கலாம்.

எங்களுடைய மக்களுடைய ஏழ்மையை போக்கி மக்களுடைய காணி
உறுதிகளை உறுதிப்படுத்தி அவர்களுடைய பொருளாதாரத்தை மேம்படுத்தி அவர்களுடைய
கல்வியை மேம்படுத்தி அவர்களுடைய சகல எதிர்பார்ப்புகளையும் நிறைவு செய்து
பாதுகாப்பாகவும் கௌரவமாகவும் வாழ்வதற்குரிய ஒரு சூழலை நாங்கள் உருவாக்கிக்
கொள்ள முடியும்.

தமிழர்களது விவகாரத்தில் ஜே.வி.பியினரும் யுத்த குற்றவாளிகளே! கஜேந்திரன் திட்டவட்டம் | Jvp Members Are Also War Criminals

அதற்காக நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அரசியல் பேதங்களைக் கடந்து இந்த இலட்சியத்திற்காக  ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்
கொள்கின்றேன்.

இந்த விடயம் தொடர்பாக முற்று முழுதாக சிங்கள இளைஞர் யுதிகளுக்கு எதிராக
இடம்பெற்ற ஒரு சம்பவம் அதனை அப்போது ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசிய கட்சியின்
அரசாங்கத்தின் காலப்பகுதியில் ரணில் விக்ரமசிங்க அமைச்சராக இருந்தபோது அந்த
படுகொலையோடு அவருக்கு சம்பந்தப்பட்டதாக குற்றச்சாட்டு ஆணைகுழு மூலமாக
வெளிப்படுத்தப்பட்டு இருக்கின்றது” என்றார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.