அம்பலாங்கொடை(Ambalangoda) காவல்துறை பிரிவிற்குட்பட்ட வீதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த குழந்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த குழந்தை இன்று(10.03.2025) காலை மாதம்பே, தேவகொட பிரதேசத்தில் உள்ள வீதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
இரண்டு மாத ஆண் குழந்தை ஒன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வீதியில் கைவிடப்பட்ட குழந்தை
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், தேவகொட பிரதேசத்திலுள்ள வீதியில் கைவிடப்பட்ட நிலையில் குழந்தை ஒன்று இருப்பதாக அம்பலாங்கொடை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் குழந்தையை மீட்டு, உடனடியாக பலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில், குழந்தை தற்போது நலமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் அம்பலாங்கொடை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.