யாழ்.நகரில் கஞ்சா கலந்த மாவா பாக்குடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம் (30) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி வழிகாட்டலில் உதவி பொலிஸ்
பரிசோதகர் நந்தகுமார் குழுவினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருவர் கைது
சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இருவரும் 40 வயது மதிக்கத்தக்கவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, சந்தேகநபர்களிடமிருந்து 9 கிலோ 300 கிராம் கஞ்சா கலந்த மாவா பாக்கு மீட்கப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட இருவரையும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில்
முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.