முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

47 ஆண்டுகளுக்குப் பின்னர் யாழ் – திருச்சி இடையே நேரடி விமான சேவை

தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி (திருச்சி) மற்றும் இலங்கையின் யாழ்ப்பாணம்
இடையே 47 ஆண்டுகளுக்குப் பின்னர் நேரடி விமான சேவை இன்று (30) முதல் தொடங்கவுள்ளது.

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நடைபெற்றதால் தமிழர்களின் பூர்வீக பூமியான
யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான நிலையம், இலங்கை இராணுவத்துக்கான விமான
தளமாக பயன்படுத்தப்பட்டு வந்தது.

தமிழ்நாட்டின் சென்னையில் இருந்து.. 

இந்தநிலையில், பலாலி விமான நிலையம் மூலமான அனைத்து பயணிகள் விமான சேவைகளும் தடை
செய்யப்பட்டிருந்தன.

மேலும், இலங்கையில் 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் பலாலி விமான
தளமும் சீரமைக்கப்பட்டது.

47 ஆண்டுகளுக்குப் பின்னர் யாழ் - திருச்சி இடையே நேரடி விமான சேவை | Direct Flight Jaffna And Trichy After 47 Years

2018 ஆம் ஆண்டு பலாலியில் முகாமிட்டிருந்த இலங்கை இராணுவம் வெளியேற்றப்பட்டு
பொதுமக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர்.

இதன்போது, இந்தியாவின் நிதி உதவியுடன் பலாலி விமான நிலையம் முழுமையாக
சீரமைக்கப்பட்டது.

பின்னர் இது பலாலி சர்வதேச விமான நிலையமாகவும் புத்துயிர் பெற்றது.

2019ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் விமானம், விமான சேவைகளுக்காக திறக்கப்பட்டது.

தமிழ்நாட்டின் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு பயணிகள் விமானம்
இயக்கப்பட்டன.

கோவிட்டிற்கு பிந்தைய காலத்தில் சென்னை- யாழ்ப்பாணம் இடையேயான விமான சேவைகள்
அதிகரிக்கப்பட்டு நாள் தோறும் இயக்கப்பட்டு வருகிறது.

புறப்படும் விமானம் ஒரு மணிநேரத்தில்

இதன் அடுத்த கட்டமாக தமிழ்நாட்டின் திருச்சி உள்ளிட்ட நகரங்களில் இருந்தும்
யாழ்ப்பாணத்துக்கு விமான சேவைகளை தொடங்குவதற்கான நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டன.

இதன் ஒரு பகுதியாகவே இன்று முதல் திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு
விமான சேவை ஆரம்பி்க்கப்பட்டுள்ளது.

47 ஆண்டுகளுக்குப் பின்னர் யாழ் - திருச்சி இடையே நேரடி விமான சேவை | Direct Flight Jaffna And Trichy After 47 Years

திருச்சியில் இருந்து பிற்பகல் 1.25 மணிக்கு புறப்படும் விமானம் ஒரு
மணிநேரத்தில் பிற்பகல் 2.25 மணிக்கு யாழ்ப்பாணத்தை சென்றடையும்.
யாழ்ப்பாணத்தில் இருந்து பிற்பகல் 3.05 மணிக்கு புறப்படும் விமானம், மாலை 4.05
மணிக்கு திருச்சிக்கு வந்து சேரும்.

திருச்சியில் இருந்து யாழ்ப்பாணம் செல்ல  ரூ5,900 முதல் ரூ6,400 வரை
அறவிடப்படவுள்ளது.

இன்றையதினம் சரியாக பிற்பகல் 02.02 மணிக்கு பலாலி விமான நிலையத்தை வந்தடைந்த
விமானத்தில் 27 பணிகள் வருகை தந்தனர்.

பலாலியிலிருந்து மீண்டும் 36 பயணிகளுடன் 3.00 மணியளவில் விமானம் திருச்சியை
நோக்கிப் புறப்பட்டுள்ளது.

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.