மன்னார் காற்றாலை மின்சார உற்பத்தி நிலையத்திற்கான மின்சார கொள்முதல்
தொடர்பில், அரசாங்கம் முன்மொழிந்த விலையை, அதானி நிறுவனம் ஒப்புக்
கொள்ளாவிட்டால், தனது அரசாங்கம், அதனுடன் ஒப்பந்தத்தை தொடராது என்று ஜனாதிபதி
அநுரகுமார திசாநாயக்க உறுதியாகக் கூறியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி தேர்தல் பேரணியில் உரையாற்றிய அவர், முன்னைய அரசாங்கம்,
அதானியுடன் ஒரு அலகுக்கு 8.26 சதம் அமெரிக்க டொலர் வீதத்திற்கு ஒப்புக்கொண்டது.
ஒப்பந்தம்
எனினும், வேறு ஒரு நிறுவனத்துடனான தற்போதைய ஒப்பந்தம் ஒரு அலகுக்கு 4.57
சென்ட் அமெரிக்க டொலர் என்பதாக அமைந்துள்ளது.

இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி, அதானி குழுமத்துடன் செய்துகொள்ளப்பட்ட
ஒப்பந்தத்தை எப்படியாவது தொடருமாறு கூறியுள்ளார்.
எந்த ஒப்பந்தம் கையெழுத்தானாலும், அவர்கள் எங்கள் விலைக்கு ஒப்புக்
கொள்ளும் வரை நாங்கள் ஒருபோதும் தொடர மாட்டோம் என்று அநுரகுமார்
வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, இலங்கை அதிகாரிகள் ஒப்பந்தத்தை மாற்றியமைக்க முயற்சித்த பிறகு,
இலங்கையில் 442 மில்லியன் டொலர் காற்றாலை மின் முயற்சியில் மேலும்
ஈடுபடுவதிலிருந்து விலகியுள்ளதாக அதானி குழுமம், கடந்த பெப்ரவரி மாதத்தில்
அறிவித்தது.

