இலங்கையின் எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட ஒரு லிட்டர் எரிபொருளுக்கான 3 சதவீத தரகு பணத்தை(Commission) ஐஓசி நிறுவனம் விசேட நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விடயத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தலையீட்டைக் கோரி விசேட நடவடிக்கையை ஐ.ஓ.சி நிறுவனம் மேற்கொள்ளவுள்ளதாக தெரியவருகிறது.
இந்நிலையில் ஐ.ஓ.சி நிறுவனம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் முறைப்பாடு அளிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
[45QAJUE
]
ஐ.ஓ.சி நிலைய உரிமையாளர்கள்
அதன்படி தயாரிக்கப்பட்ட ஒரு குறிப்பாணையை இந்திய உயர்ஸ்தானிகராலயத்திடம் கையளிப்பதற்கும், தற்போதுள்ள பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் ஐ.ஓ.சி நிலைய உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் இது குறித்து இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்குத் தெரிவித்திருந்தாலும், அதற்கு சாதகமான பதில் கிடைக்காததால், இதை இந்தியப் பிரதமரிடம் தெரிவிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் அதிகாரப்பூர்வ பயணமாக இலங்கைக்கு வருகை தர உள்ளமை குறிப்பிடத்தக்கது.