முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மன்னாரில் சிவராத்திரி தினமன்று திருடப்பட்ட நகைகள் : காவல்துறையின் துரித நடவடிக்கையில் மீட்பு

மன்னார்(mannar) காவல்துறை பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம் பகுதியில் கடந்த சிவராத்திரி
தினத்தன்று இரவு திருடப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மன்னார்
காவல்துறையினர் இன்றைய தினம் சனிக்கிழமை (15) மீட்டதுடன் திருட்டு
சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்.

சிவராத்திரி தினமன்று களவாடப்பட்ட நகைகள்

மன்னார் காவல்துறை பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில்
கடந்த சிவராத்திரி தினத்தன்று பல இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள்
திருடப்பட்டிருந்தது.

மன்னாரில் சிவராத்திரி தினமன்று திருடப்பட்ட நகைகள் : காவல்துறையின் துரித நடவடிக்கையில் மீட்பு | Jewelry Worth Millions Stolen In Mannar Recovered

இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர் மன்னார் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்த
நிலையில் குறித்த திருட்டு சம்பவம் தொடர்பாக மன்னார் காவல் நிலைய
பொறுப்பதிகாரி ஜயதிலக்கவின் பணிப்புரைக்கு அமைவாக குற்ற விசாரணை பிரிவு
பொறுப்பதிகாரி மகேஷ் தலைமையிலான காவல்துறை குழுவினர் மேற்கொண்ட தேடுதல் மற்றும்
விசாரணைகளின் போது மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

மீட்கப்பட்ட நகைகள்

கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து சுமார் 28 லட்சம் ரூபாய் பெறுமதியான
நகைகள் மீட்கப்பட்டதுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மன்னார் சாந்திபுரம்
மற்றும் பனங்கட்டுகொட்டு பகுதியை சேர்ந்த 28,29,33 வயதுடைய நபர்கள் என தெரிய
வந்துள்ளது.

மன்னாரில் சிவராத்திரி தினமன்று திருடப்பட்ட நகைகள் : காவல்துறையின் துரித நடவடிக்கையில் மீட்பு | Jewelry Worth Millions Stolen In Mannar Recovered

கைது செய்யப்பட்ட மூவரும் போதைப்பொருள் பாவனைக்கு
அடிமையானவர்கள் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.  மூவரும் மேலதிக விசாரணைகளின் பின்னர் மன்னார்
நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.       

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்