அமெரிக்காவிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் வரி விலக்கு பட்டியலில் இலங்கை சேர்க்கப்படவில்லை.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த வரிகளிலிருந்து உலகின் மிக வறிய மற்றும் மிகச் சிறிய நாடுகளுக்கு விலக்கு அளிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, அமெரிக்க வரி முறையிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டிய உலகின் 28 ஏழ்மையான மற்றும் சிறிய நாடுகளை அந்த அமைப்பு அடையாளம் கண்டிருந்தது.
புதிய வரி
அந்த நாடுகள் கடுமையான பொருளாதார ஆபத்தில் இருக்கக்கூடும் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இந்த 28 நாடுகளில் இலங்கை சேர்க்கப்படவில்லை என்று மேலும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறானதொரு பின்னணியில், சமீபத்தில் இலங்கை உட்பட பல சர்வதேச நாடுகளுக்கு புதிய வரிகளை அறிவித்தும் அதிகரித்தும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பொன்றை வெளியிட்டார்.
மக்களுக்கு ஆபத்து
அதன்போது, இலங்கைக்கு 44 வீத வரி விதிக்கப்பட்ட நிலையில், லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைகள் பறிபோகும் அபாயாம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இலங்கை மீது விதிக்கப்பட்டுள்ள வரிகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இலங்கையின் பிரதிநிதிகள் குழுவொன்று அமெரிக்கா செல்லவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.