முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல் : குறைக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை

லங்கா சதொச (Lanka Sathosa) நிறுவனத்தினால் பொது மக்களுக்கு வழங்கப்படும் பல அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று (18.03.2025) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சிவப்பு சீனி, சிவப்பு பருப்பு, கோதுமை மா, ரின் மீன், உருளைக்கிழங்கு, வெள்ளை கௌப்பி, பெரிய வெங்காயம், வெள்ளைப்பூண்டு ஆகிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, ஒரு கிலோ கிராம் சிவப்பு சீனியின் விலை 8 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 277 ரூபாவாக பதிவாகியுள்ளது.

புதிய விலை

ஒரு கிலோ கிராம் சிவப்பு பருப்பு 4 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 279 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 162 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல் : குறைக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை | Prices Of Several Essential Commodities Reduced

ரின் மீன் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 490 ரூபாவாக பதிவாகியுள்ளது.

ஒரு கிலோ கிராம் உருளைக்கிழங்கின் விலை 13 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 185 ரூபாவாக பதிவாகியுள்ளது.

ஒரு கிலோ கிராம் வெள்ளை கௌப்பியின் விலை 45 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 750 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயத்தின் விலை 25 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலையாக 160 ரூபா பதிவாகியுள்ளது.

ஒரு கிலோ கிராம் வெள்ளைப்பூண்டின் விலை 20 ரூபாயால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 575 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ERBUW3F

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.