அம்பாறை(ampara), தமண 100 அடி வீதியில் காட்டு யானை தாக்கியதில் கல்ஓயா பெருந்தோட்ட நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கரும்புத் தோட்டத்திற்குள் நுழையும் காட்டு யானைகளை விரட்டுவதற்காக கல்லோயா தோட்ட நிறுவனம் தொழிலாளர்களைப் பணியமர்த்தியுள்ளதாகவும், இன்று (19) அதிகாலை 3.30 மணியளவில் இரவு நேரக் கண்காணிப்பில் இருந்தபோது இந்த காட்டு யானை தாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மூன்று பிள்ளைகளின் தந்தை
உயிரிழந்தவர் 39 வயதான கோசல குமார என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையாவார், இவர் கல்ஓயா பெருந்தோட்ட நிறுவனத்தின் யானை கட்டுப்பாட்டுப் பிரிவில் பணிபுரிந்தார்.
இந்த இடத்தில் மூன்று பேர் பணியில் இருந்தனர், காட்டு யானை தாக்க வந்தபோது, அவர்கள் தப்பிக்க ஓடினார்கள், ஆனால் காட்டு யானை அவர்களைத் துரத்திச் சென்று இவரைத் தாக்கி கொன்றுள்ளது.