அஜித்தின் குட் பேட் அக்லீ படம் கடந்த ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் ஆகி இருந்தது. ரசிகர்கள் முதல் நாளில் இருந்தே படத்தை கொண்டாடிய நிலையில் நல்ல வசூலும் குவிந்தது.
உலக அளவில் இதுவரை 240 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து இருக்கிறதாம் இந்த படம்.
வெளிநாட்டு வசூல்
குட் பேட் அக்லீ வெளிநாட்டில் மற்றும் எவ்வளவு வசூலித்து இருக்கிறது என்கிற தகவல் தற்போது வந்திருக்கிறது.
இதுவரை ஓவர்சீஸ் வசூல் மட்டும் 62 கோடி ரூபாய் வந்திருக்கிறதாம்.
மேலும், தமிழ்நாட்டில் மட்டும் இந்த படம் விரைவில் 150 கோடி வசூலை தொடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.