முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் காணி இல்லாத ஆயிரக்கணக்கான குடும்பங்கள் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

யாழ்ப்பாணம் (Jaffna) மாவட்டத்தில் 11,081 குடும்பங்கள் தமக்குக் காணிகள் இல்லை
என்றும், காணிகளை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளதாக யாழ் மாவட்டச் செயலகத் (District Secretariat – Jaffna) தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணம்
மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலர் பிரிவுகளில் உள்ள குடும்பங்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளன.

அதன்படி, காரைநகர் பிரதேச செயலர்
பிரிவில் 27 குடும்பங்களும், கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 823
குடும்பங்களும், கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் 796 குடும்பங்களும்,
யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் 2,828 குடும்பங்களும்,
மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் 342 குடும்பங்களும், சண்டிலிப்பாய்
பிரதேச செயலாளர் பிரிவில் 568 குடும்பங்களும், பருத்தித்துறை பிரதேச செயலாளர்
பிரிவில் 730 குடும்பங்களும், வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவில் 456
குடும்பங்களும் காணிகளின்றி இருக்கின்றன.

வழங்கப்பட்டுள்ள காணிகள்

அத்துடன் நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் 1,855
குடும்பங்களும், உடுவில் பிரதே செயலர் பிரிவில் 1,176 குடும்பங்களும்,
தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் 526 குடும்பங்களும், ஊர்காவற்துறை பிரதேச
செயலாளர் பிரிவில் 256 குடும்பங்களும், சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில்
589 குடும்பங்களும், சங்கானை பிரதேச செயலர் பிரிவில் இருந்து 109
குடும்பங்களும் என யாழ். மாவட்டத்தில் 11 ஆயிரத்து 81 குடும்பங்கள் தமக்கு
காணிகளை வழங்குமாறு கோரிக்கைகளை
முன்வைத்துள்ளன.

யாழில் காணி இல்லாத ஆயிரக்கணக்கான குடும்பங்கள் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | 11 081 Families Without Land In Jaffna District

இவற்றில், யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவில் 2 குடும்பங்களுக்கும்,
சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் 38 குடும்பங்களுக்கும், வேலணை பிரதேச
செயலாளர் பிரிவில் 22 குடும்பங்களுக்கும், தெல்லிப்பழை பிரதேச செயலாளர்
பிரிவில் 85 குடும்பங்களுக்கும், ஊர்காவற்துறை பிரதேச செயலாளர் பிரிவில் 26
குடும்பங்களுக்கும், சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் 72
குடும்பங்களுக்கும் என மொத்தமாக 352 குடும்பங்களுக்கு இவ்வாறு காணிகள்
வழங்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் 10,729 குடும்பங்கள் தமக்கு காணிகளை வழங்குமாறு முன்வைத்த கோரிக்கைகள்
நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.