இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக பெட்ரோலியப் பொருட்களின் ஏற்றுமதி வருவாய் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளது.
கப்பல் மற்றும் விமான எரிபொருள் விநியோக அளவு அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணம் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு, நாட்டின் ஏற்றுமதி வருவாய் 12.8 பில்லியன் டொலர்களாக இருந்தது.
ஏற்றுமதியில் முன்னேற்றம்
இது 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 7.02 சதவீத வளர்ச்சியாகும்.
பெற்றோலியப் பொருட்கள் ஏற்றுமதி உள்ளிட்ட கைத்தொழில் ஏற்றுமதிகள் அதிகரித்தமையும் ஏற்றுமதி வருமானத்தின் வளர்ச்சிக்கு காரணம் என மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.