முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஆட்டம் காணும் இந்தியா பாதுகாப்பு…! பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்பாரா மோடி

இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதல் காரணமாக, சவுதி அரேபியா பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) அவசர அவசரமாக டெல்லி திரும்பியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன் ஜம்மு காஷ்மீரில் நடந்த தாக்குதல் தொடர்பாக அதிகாரிகளுடன் அவர் உடனடியாக முக்கிய ஆலோசனை நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று (22) நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களில் குறைந்தது 26 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மோடியின் கருத்து

இந்த சம்பவம் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

“இந்த கொடூரமான சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும், இந்த பயங்கரவாத தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு நான் இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்க வழிவகை செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அமித் ஷாவின் நிலைப்பாடு

அத்துடன் இந்த தாக்குதல் குறித்து, உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit Shah), தனது சமூக ஊடக பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதன்படி, “இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தப்ப முடியாது முழு பலத்துடன் பதிலடி கொடுக்கப்படும், பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீதான பயங்கரவாதத் தாக்குதலால் நான் வருத்தமடைந்தேன்.

இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்”, என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பிரதமர் மோடி காணொளி அழைப்பு மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒரு கூட்டம் நடத்த இருக்கிறார் என்றும்  என்றும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.