நயன்தாராவின் டெஸ்ட்
நடிகை நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் டெஸ்ட்.
இப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடித்திருந்தனர். தயாரிப்பாளர் சசிகாந்த் இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் திரையரங்கில் வெளிவரும் என எதிர்பார்த்த நிலையில், நேரடியாக ஓடிடியில் வெளியிட்டனர்.
குட் பேட் அக்லி படம் உலகளவில் இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா, இதோ பாருங்க
நெட்பிளிக்ஸ் தான் இப்படத்தை ஓடிடி-யில் ஒளிபரப்பியது. ஆனால், படம் வெளிவந்ததும் ரசிகர்களிடையே நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது. ரசிகர்களை முழுமையாக இப்படம் திருப்திப்படுத்தவில்லை.
மாபெரும் நஷ்டம்
இந்த நிலையில், டெஸ்ட் திரைப்படம் குறித்து பிரபல மூத்த பத்திரிக்கையாளர் பிஸ்மி தகவல் ஒன்றை கூறியுள்ளார். அதாவது, டெஸ்ட் படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ. 55 கோடி கொடுத்த வாங்கியுள்ளனர்.
படம் வெளிவந்த ரெஸ்பான்ஸ் சரியாக இல்லாத காரணத்தினால், இதுவரை ரூ. 5 கோடி கூட நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு கிடைக்கவில்லை என அவர் கூறியுள்ளார். இதன்மூலம் நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்திற்கு ரூ. 50 கோடி வரை நஷ்டம் என தெரிகிறது.