தாய்லாந்தில் (Thailand) உள்ள பிரபல உணவகத்தின் தள்ளுபடி அறிவிப்பு உலக அளவில் தற்போது வைரலாகி வருகின்றது.
உலகில் பல இடங்களிலும் உள்ள உணவகங்கள் காலத்திற்கு தகுந்தாற்போல் தங்களது வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி வழங்கும் அறிவிப்பதை கேள்விபட்டிருப்போம்.
ஆனால் தாய்லாந்தில் உள்ள ஒரு உணவகம் ஒல்லியாக இருப்பவர்களுக்கு தள்ளுபடி வழங்குவது ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
தள்ளுபடி முறை
அங்கு சியாங் மாயி பகுதியில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில், வாடிக்கையாளர்களின் உடல் அளவை அடிப்படையாக கொண்டு தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது.
அதாவது உணவகத்தில் ஒரு பகுதியில் 5 வகையான உலோக கம்பிகள் உள்ளன. ஒவ்வொரு கம்பிகளுக்கு இடையேயும் குறிப்பிட்ட இடைவெளிகள் உள்ளன.
உடல் அளவு
அதில், ஒவ்வொரு உடல் அளவுக்கு ஏற்ற வகையில் 5 முதல் 20 சதவீதம் வரை தள்ளுபடிகள் உள்ளன.
View this post on Instagram
இந்நிலையில், வாடிக்கையாளர்கள் தங்கள் உடல் அளவுக்கேற்ற கம்பிகள் வழியாக செல்லும் போது அவர்களுக்கு ஏற்ற தள்ளுபடி வழங்கப்படுகின்றது.