உந்துருளிகளில் பயணித்த சில இளைஞர்கள் கம்பஹாவில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள்
பட்டாசுகளை வீசிவிட்டு தப்பிச் செல்லும் காணொளிக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கம்பஹாவில் அமைந்துள்ள..
இந்த சம்பவம், குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த
சிசிடிவி கருவியில் பதிவாகியுள்ளது.

குறித்த இளைஞர்களின் பொறுப்பற்ற செயல் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


