முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கனடா செல்ல ஆசைப்பட்ட இளைஞர்கள் – விமான நிலையத்தில் நேர்ந்த கதி

மோசடியான கனேடிய விசாக்களைப் பயன்படுத்தி கனடாவுக்கு (Canada) செல்ல முயன்ற 11 இலங்கையர்களும் அவர்களை விமான நிலையத்திற்கு அழைத்து வந்த தரகரும் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் நேற்று (24) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் (Colombo Bandaranaike International Airport) புறப்படும் முனையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், டுபாய்க்குப் புறப்படும் சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் ஏறுவதற்காக அவர்கள் நேற்று (24) மாலை 6.40 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

கனடாவின் டொராண்டோ

அவர்கள் குறித்த விமானத்தில் டுபாய் சென்று அங்கிருந்து கனடாவின் டொராண்டோ செல்ல திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 

கனடா செல்ல ஆசைப்பட்ட இளைஞர்கள் - விமான நிலையத்தில் நேர்ந்த கதி | 11 Arrested At Airport Trying To Travel To Canada

அவர்கள் கைது செய்யப்பட்ட நேரத்தில், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவையும் பெற்றிருந்தனர்.

இதன்போது, 11 இளைஞர்களும் அவர்களை விமான நிலையத்திற்கு அழைத்து வந்த தரகரும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.   

அவர்கள் 35 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் கொழும்பு, களுத்துறை, பதுளை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

இவர்களை இன்று நீர்கொழும்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.