இலங்கை மக்கள் சார்பாக பாப்பரசருக்கு தனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இரங்கல்
அந்தப் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அமைதி, இரக்கம் மற்றும் மனிதநேயத்திற்காக அவரின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு உலகில் ஒரு அழியாத அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளது.
It is with deep sorrow that I extend my heartfelt condolences on the passing of His Holiness @Pontifex, on behalf of the people of Sri Lanka. His unwavering commitment to peace, compassion and humanity has left an indelible mark on the world.
May his legacy of compassion,…
— Anura Kumara Dissanayake (@anuradisanayake) April 21, 2025
அவரது கருணை, நீதி மற்றும் மதங்களுக்கு இடையேயான நல்லிணக்கம் ஆகியவற்றின் மரபு எதிர்கால சந்ததியினருக்கு ஒரு முன்மாதிரியாக அமையும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் முதல் லத்தீன் அமெரிக்கத் தலைவரான போப் பிரான்சிஸ், தனது 88 ஆவது வயதில் காலமானார் என்று வத்திக்கான் தெரிவித்துள்ளது.